15774d6f82a2c6-1

முள்ளங்கி

கசப்புத் தன்மை வாய்ந்த முள்ளங்கியை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். அதனால் இதை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து கொண்டால் பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளங்கி கிடைக்கிறது.

மருத்துவக் குணங்கள்:

  • முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
  • முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை, இவை கரைய செய்கின்றன.
  • சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  • மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
  • முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
  • அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளது.