Hoorana Rasam

இடித்த ரசம்

இடித்த ரசம்

தேவையான பொருட்கள்:

  • புளி – நெல்லிக்காய் அளவு
  • தக்காளி – 2
  • பச்சைமிளகாய் – 2
  • கொத்துமல்லி – 2 கொத்து
  • பூண்டு – 1
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • வெங்காயம் – ஒன்று
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • உப்புத்தூள் – தேவைக்கு

செய்முறை:

  1. புளியைச் சுடுநீரில் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை அம்மியில் இடித்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். பின் இடித்த விழுதைச் சேர்க்கவும். வதங்கியதும் தூள் வகைகளைச் சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின் கரைத்த புளிக்கரைசலைச் சேர்த்து நுரை பொங்கும்போது அணைத்து விடவும்.
    இடித்த ரசம் தயார். மேலே கொத்துமல்லி தூவி பரிமாறவும்.