Masala-egg-fry

ஈசி முட்டை ஃப்ரை

ஈசி முட்டை ஃப்ரை

தேவையான பொருட்கள்:

  • முட்டை- – 4
  • தனியாத்தூள்- – 2 டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள்- – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா- – 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள்- – 1 டீஸ்பூன்
  • உப்பு – -தேவையான அளவு
  • எண்ணெய்- – 4 டீஸ்பூன்

செய்முறை:

  1. முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி, இரண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
    எண்ணெய் தவிர அனைத்து பொடிகளையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். அதில் முட்டையை ஒவ்வொன்றாக வைத்து அதன் மேல் கலந்துவைத்திருக்கும் பொடியைத் தூவவும்.
  3. பின் ஒவ்வொரு முட்டையாக திருப்பிப் போட்டு மீண்டும் பொடிகளைத் தூவவும். பின் அடுப்பை அணைத்துவிடவும்.
  4. சுவையான ஈசி முட்டை ஃப்ரை ரெடி
  5. இந்த ஃப்ரை சாம்பார் சாதம், கலந்த சாத வகைகளுக்கு நல்ல காம்பினேஷன்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *