தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 400 கிராம்
- வெங்காயம் – 2 (நீளமாக அரிந்தது)
- தக்காளி – ஒன்று சிறியது (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – ஒன்று
- மல்லி இலை – சிறிது
- மல்லிப் பொடி – 1 1/2 தேக்கரண்டி
- சீரகப்பொடி – அரை தேக்கரண்டி
- மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
- மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
- தயிர் – ஒரு மேசைக்கரண்டி
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
- வெங்காயம் – 2
- பட்டை – சிறிய துண்டு
- ஏலம் – 2
- கிராம்பு – 2
- இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
- அதே எண்ணெயில் அரைத்த விழுது மற்றும் எல்லாப் பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் தயிர், பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்.
- அவை நன்கு வதங்கியவுடன் கறியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கறி நன்கு வதங்கியவுடன் ஒரு கப் நீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
- கறி வெந்தவுடன் பொரித்த வெங்காயம் போட்டுக் கிளறி, மல்லி இலை தூவி இறக்கவும்.
- சிக்கன் தோபியாசா ரெடி.
Add Comment