DSC_0275

அகத்திப்பூ ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

  • அகத்திப்பூ – 25 பூக்கள்
  • முட்டை – 4
  • வெங்காயம் – ஒன்று
  • பச்சை மிளகாய் – 2
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

  1. அகத்திப்பூவின் இதழ்களைத் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
    பிரித்த இதழ்களைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் அகத்திப்பூ சேர்த்து வதக்கவும். (விரும்பினால் ஒரு தக்காளி சேர்த்தும் வதக்கலாம். உப்பு சேர்க்க வேண்டாம்).
  3. ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் வதக்கிய கலவை, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  4. தவாவை சூடாக்கி மீதமுள்ள எண்ணெயை பரவலாக தடவவும். அதில் முட்டைக் கலவையை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
  5. சுவையான, சத்தான அகத்திப்பூ ஆம்லெட் தயார்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *