morkuzhambu1

தேவையான பொருட்கள்:

  • பூசணிக்காய் — 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் — 1/4 ஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் — 1 கப்
  • சின்ன வெங்காயம் — 3
  • சீரகம் — 1/4 ஸ்பூன்
  • சோம்பு — 5
  • தயிர் — 3/4 கப் ( புளித்தது )
  • தேங்காய் எண்ணெய் — 2 ஸ்பூன்
  • கடுகு — 1/4 ஸ்பூன்
  • வெந்தயம் — 10
  • சின்ன வெங்காயம் — 2
  • காய்ந்த மிளகாய் — 3
  • மோர் மிளகாய் — 3
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  1. முதலில் பூசணிக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விடவும்
    தேங்காய்,சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் சோம்பை அரைத்துக் கொள்ளவும்.
  2. பூசணிக்காய் பாதி வேகும் பொழுதே அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.
    பின்பு பூசணிக்காய் நன்கு வெந்ததும் தீயை அணைத்து விட்டு நன்கு புளித்த தயிர் சேர்த்து கலந்து விடவும்
  3. பின்பு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாக சேர்த்து தாளித்துக் கொட்டவும்
    இதே முறையில் செய்தால் மோர்க் குழம்பு சுவையாக இருக்கும்.மோர்மிளகாய் மோர்க் குழம்புக்கு ருசி சேர்க்கும்.