chicken-and-sweet-corn-soup-28985-1

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – அரை கிலோ
  • டின் கார்ன் – 200 கிராம்
  • சிக்கன் க்யூப் – (ஸ்டாக்) – 2
  • வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  • கார்ன் ஃப்ளார் – 3 மேசைக்கரண்டி
  • வெள்ளை மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • முட்டை – 2
  • உப்பு – அரைத் தேக்கரண்டி
  • கொத்துமல்லித் தழை (விரும்பினால்)

செய்முறை:

  1. சிக்கனுடன் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, அதனுடன் சிக்கன் க்யூப் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. பாதி அளவு கார்னை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
    வேக வைத்த சிக்கனுடன் மீதமுள்ள கார்ன், அரைத்த கார்ன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். சூப் கொதிக்கும் போது சிறிது தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். (விரும்பினால் கொத்துமல்லித் தழை சேர்க்கலாம்).
  3. அதனுடன் முட்டையை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.
  4. சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார். வெள்ளை மிளகுத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.