sheer-khurma-recipe

ஷிர் குர்மா

தேவையான பொருட்கள்:

  • வறுத்த சேமியா- – -100 கிராம்
  • பால் – -2 லிட்டர்
  • சீனி – -1/4 கிலோ
  • தண்ணீர் – -2 கப்
  • நெய்- – -5 டீஸ்பூன்
  • நறுக்கிய முந்திரி- – -50 கிராம்
  • நறுக்கிய பேரீச்சம் பழம் – -50 கிராம்
  • ஊறவைத்து நறுக்கிய பாதாம் – -50 கிராம்
  • ஏலக்காய்- – -5

செய்முறை:

  1. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் முந்திரி, பாதாமை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  2. தண்ணீரில் சீனி போட்டு நன்றாக பாகு பதத்தில் காய்ச்சவும்.
    பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக 1 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
  3. அதன் பின்பு வறுத்த சேமியாவை சேர்க்கவும். பிறகு பேரீச்சம் பழத்தை போட்டு காய்ச்சவும்.
  4. சீனிப் பாகை சேர்த்து கலக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் கலந்து 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.