ஷம்மி கபாப்

ஷம்மி கபாப்

தேவையான பொருட்கள்:

  • மிருதுவான கறித்துண்டுகள் – -கால் கிலோ
  • முட்டை – -ஒன்று
  • கடலைப்பருப்பு – -3 மேசைக்கரண்டி
  • மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் – -ஒரு கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – -3
  • பொடியாக நறுக்கிய பூண்டுப் பற்கள் – -12
  • உப்பு – -தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – -அரை தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்துமல்லி — -அரை கப்
  • கறிவேப்பிலை – -சில இலைகள்
  • சீரகம் – -கால் தேக்கரண்டி
  • சோம்பு – -ஒரு தேக்கரண்டி
  • பட்டை – -ஒரு சிறிய துண்டு
  • மிளகாய்த்தூள் – -ஒரு தேக்கரண்டி
  • ஏலம் – -ஒன்று
  • கிராம்பு – -ஒன்று
  • மிளகு – -4

செய்முறை:

  1. கடலைப்பருப்பைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பை எடுத்து தண்ணீரை இறுத்துவிட்டு அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி பொடி செய்து வைத்திருக்கும் தூள், கறித்துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. இந்த அரைத்த கலவையுடன்
    மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வடைகளாக தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு இரு புறமும் வெந்து, பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும். சுவையான ஷம்மி கபாப் ரெடி. தக்காளி சாஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *