kondakadalai -sundal

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
  • காய்ந்த மிளகாய்- – 3
  • கடுகு – தேவையான அளவு
  • உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள்- – தலா கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை- – சிறிதளவு
  • தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
  • எண்ணெய்- – 2 டீஸ்பூன்
  • உப்பு- – தேவையான அளவு.

செய்முறை:

  1. குக்கரில் 4–5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி… கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  2. அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.
  3. சத்தான சுண்டல் ரெடி!