all-2012-272

வெள்ளைப் புலாவ்

தேவையான பொருட்கள்:

அரிசி – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 250 கிராம்
பச்சைப் பட்டாணி – 250 கிராம்
மட்டன் – 1/2 கிலோ
மிளகாய் – 10–15 பச்சை
இஞ்சிப்பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
வெள்ளை சீரகம் – 1 தேக்கரண்டி
கறுப்பு சீரகம் – 1 தேக்கண்டி
கருமிளகு – 10–15
பிரியாணி இலை – 2
கிராம்பு – 4–5
கறிவேப்பிலை – இலைகள் 8–10
துண்டுகள் – 2–3 பட்டை
ஏலக்காய் – 4–5
வெங்காயம் – 2 பெரிய
உப்பு – ருசிக்கேற்ப
கொத்துமல்லித் தழை

செய்முறை:

வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கறிவேப்பிலை, பிரியாணி இலை மற்றும் கரம்மசாலா,மிளகு,சீரகம், கிராம்பு,ஏலக்காய் போட்டு வதக்கவும். இத்துடன் பட்டாணி, உருளைக்கிழங்கு மட்டன் போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும். இதில் இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கும்போது அரிசி போட்டு வதக்கவும். குறைவான தீயில் வைத்து வேகும் வரை வைக்கவும். இதன் மீது சிவப்பு வெங்காயத்தை வெட்டி அலங்கரிக்கலாம்.