_Kerala_Style_Sugian_Recipe_Sweet_Moong_Dal_Bondas

வெரைட்டி ஃப்ரூட் சுகியன்

தேவையான பொருட்கள்:

  • பைனாப்பிள் துண்டுகள் – -100 கிராம்
  • ஸ்ட்ராபெர்ரி – -4
  • மாம்பழம், வாழைப்பழம் – -தலா 2 துண்டுகள்
  • உளுந்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் – -தலா 100 கிராம்
  • ஏலக்காய்த்தூள் – -சிறிதளவு
  • எண்ணெய் – -200 மி.லி

செய்முறை:

  1. உளுந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூர்ணமாக தயாரிக்கவும்.
  2. இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.