keerai-kootu-09-1449648107

வெந்தயக்கீரை பருப்புக் கடைசல்

தேவையான பொருட்கள்:

  • வெந்தயக்கீரை – 1 கட்டு
  • பாசிப்பயறு – 100 கிராம்
  • பச்சைமிளகாய் – 2
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்துமல்லி – 1 டீஸ்பூன்
  • கடுகு – ½ டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

  1. கீரைத் தண்டை நறுக்கிக்கொண்டு, பருப்புடன் குக்கரில் சேர்க்கவும். போதுமான தண்ணீரில் சேர்த்து கூடவே உப்பு சேர்த்து, கீரை & பாசிப்பயறை வேக வைக்கவும்.
  2. சுமார் ஒரு விசிலிலே வெந்துவிடும். கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு & சீரகத்தைச் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மல்லியைச் சேர்த்து வதக்கவும்.
  4. வேக வைத்த பருப்புக் கீரையை இதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.