02f252356e3481cd9690358aae525eac--rice-porridge-fish-porridge-recipe

வெஜிடபிள் ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் — அரை கப்
  • பச்சைப் பட்டாணி — 5 மேசைக்கரண்டி
  • பீன்ஸ் — 5
  • காரட் — ஒன்று
  • பச்சை மிளகாய் — 2
  • சின்ன வெங்காயம் — 5
  • தக்காளி — ஒன்று
  • மஞ்சள் தூள் — அரை தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு — சிறிது
  • மிளகுத் தூள் — அரை தேக்கரண்டி
  • சீரகத் தூள் — அரை தேக்கரண்டி
  • உப்பு — தேவையான அளவு
  • எண்ணெய் — ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு, உளுந்தம் பருப்பு — தலா ஒரு தேக்கரண்டி
  • மல்லித் தழை — 2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் — 2 கப்

செய்முறை:

  1. காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
  2. குக்கரில் காய்கறிக் கலவை, ஓட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
    சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கஞ்சி தயார். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை சூடாக பரிமாறவும்.