வாழைப்பூ-முருங்கைக்கீரை-துவட்டல்

வாழைப்பூ& முருங்கைக்கீரை துவட்டல்

தேவையான பொருட்கள்:

சிறிய வாழைப்பூ – 1
முருங்கைக்கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1 சிறியது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – லு கப்
தாளிக்க
கடுகு + உளுந்த்தம் பருப்பு – லு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாழைப்பூவைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்
கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
வதங்கியதும் வாழைப்பூவைப் போட்டு உப்பு மற்றும் ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
முக்கால் பதம் பூ வெந்ததும் கீரையைப் போடவும் .மூடக்கூடாது, மூடினால் கீரை கறுத்துவிடும்.
தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.