வாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு

வாழைத்தண்டு- & பச்சை வேர்க்கடலைக் கூட்டு

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு- – -ஒரு துண்டு
பாசிப்பருப்பு- – -அரை கப்
சின்ன வெங்காயம்- – -8
பச்சை மிளகாய்- – -2
சீரகம்- – -அரை டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை- – -கால் கப்
கறிவேப்பிலை- – -2 ஆர்க்கு
நெய்,பால்- – -சிறிதளவு
உப்பு- – -தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன், நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.