varagarisi-tomato-rice-copy

வரகரிசி தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:

வரகரிசி — 1/2 கப்
தக்காளி — 2 (அரைத்தது)
வெங்காயம் — 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது — 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் — 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் — 1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு — தேவையான அளவு
கடுகு — 1/4 டீ ஸ்பூன்

செய்முறை:

வரகரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின், பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி….