potato-and-leek-soup_1980x1320-118410-1

லீக் & உருளை சூப்

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – ஒன்று
  • லீக் – ஒன்று
  • சிக்கன் ஸ்டாக் – ஒரு கப்
  • க்ரீம் – கால் கப்
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
  • சிக்கன் துண்டுகள் – 2 (வேக வைத்து உதிர்த்தது)
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளை மற்றும் லீக்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய லீக்ஸைப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    கொதிக்கத் துவங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மூடியிட்டு வேகவிடவும்.
    காய்கள் வெந்ததும் ஆறவிடவும்.
  3. ஆறியதும் மிக்ஸியில் அல்லது பிளண்டரில் போட்டு சூப் பதத்திற்கு அடிக்கவும்.
    கலவை கெட்டியாக இருக்கும். அதை மீண்டும் அடுப்பில் வைத்து சிக்கன் ஸ்டாக் சேர்த்து,
  4. தேவைப்பட்டால் சிறிது கொதிநீர் ஊற்றி சூடாக்கவும். அத்துடன் க்ரீமையும்(Full Cream) சேர்த்து ஒரு கொதிவரவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. சுவையான லீக் & உருளை சூப் ரெடி. பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் மற்றும் வேக வைத்து உதிர்த்த சிக்கன் துண்டுகளைத்(Shredded Chicken)தூவி, கால் தேக்கரண்டி க்ரீம் சேர்க்கவும். கார்லிக் ப்ரெட்டுடன் சூடாகப் பரிமாறவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *