IMG_9546

லால் மாஸ்

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – -1/4 கிலோ
  • மிளகாய் வற்றல் – -8
  • வெங்காயம் – -1
  • கொத்துமல்லி இலை – -சிறிது
  • மல்லித் தூள் – -1 தேக்கரண்டி
  • தயிர் – -1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – -1 மேசைக்கரண்டி
  • உப்பு – -தேவையான அளவு
  • நெய் – -3 மேசைக்கரண்டி
  • பட்டை, லவங்கம், கருப்பு & பச்சை ஏலக்காய் – -தேவையான அளவு
  • மல்லித் தூள் – -2 தேக்கரண்டி

செய்முறை:

  1. 6 மிளகாய் வற்றலை சூடான நீரில் ஊற வைக்கவும். அரைத்து விழுதாக்கவும்.
    மட்டனில் உப்பு, சிறிது மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி தயிர் கலந்து ஊற வைக்கவும்.
  2. குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் 2 மிளகாய் வற்றல், மசாலாப் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  3. இதில் மட்டன் சேர்த்து வதக்கி மீதம் உள்ள மிளகாய் விழுது மற்றும் மல்லித் தூள், தயிர் கலந்து கிளறி மூடி 1 விசில் வைத்து 15 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்.
    மட்டன் நன்றாக வெந்ததும் திறந்து அடுப்பில் சிறு தீயில் வைத்து எண்ணெய் பிரிய
  4. கிளறி மல்லி இலை தூவி எடுத்துப் பரிமாறவும்.
    சுவையான லால் மாஸ் தயார்.