Reshmi-Curry-2-copy

ரேஷ்மீ சிக்கன்

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – -1/2 கிலோ
  • நறுக்கிய வெங்காயம் – -2
  • அரைத்த வெங்காயம்- – -1
  • தக்காளி ப்யூரி – -5 டீஸ்பூன்
  • பாலாடை – -1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – -2 டீஸ்பூன்
  • ப.மிளகாய்- – -6
  • மிளகுத்தூள் – -1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- – -1/2 டீஸ்பூன்
  • சோயாசாஸ் – -1/2 டீஸ்பூன்
  • கரம்மசாலா- – -1 டீஸ்பூன்
  • கொத்துமல்லி- – -கொஞ்சம்
  • அரைத்த முந்திரி விழுது – -1/4 கப்
  • உப்பு, எண்ணெய்- – -தேவைக்கு

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே எண்ணெயில் அரைத்த வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  3. இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி ப்யூரி, பாலாடை போட்டு வதக்கவும்.
  4. சிக்கனை போட்டு வதக்கிய பின்பு மிளகுத்தூள், மிளாகாய்த்தூள், முந்திரி விழுது சேர்த்து 10 நிமிடம் பிரட்டவும்.
  5. பிறகு உப்பு சோயாசாஸ் ஊற்றி 10 நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கவும். பரிமாறும் முன்பு வறுத்து வைத்த வெங்காயத்தை மேலே போட்டு எலுமிச்சைச்சாறு ஊற்றிப் பரிமாறவும்.