maxresdefault-1

ராகி அல்வா

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – 1/2 கப்
நாட்டுக் கரும்பு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் – 2 கப்
செக்குல ஆட்டிய தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
முந்திரிப்பருப்பு – 1/4 கப்
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப்
நெய் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஒரு வடைச்சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு கேழ்வரகு மாவை தண்ணீர் கொண்டு கட்டிகள் விழாமல் கூழ் போல கரைத்துக் கொள்ளவும். அது விழுது ( பேஸ்ட் ) பதத்திற்கு இருத்தல் நல்லது.
ஒரு அகன்ற கனமான இரும்பு வடைச்சட்டியில் கேழ்வரகு மாவுக் கரைசலை ஊற்றி சிறுதீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
3 நிமிடங்களுக்குப் பிறகு வடைச்சட்டியில் நாட்டு கரும்பு சர்க்கரையையும் சேர்த்து ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
இப்பொழுது இடை இடையில் கொஞ்சம்
கொஞ்சமாக தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொண்டே கிளறவும்.
பிறகு இந்த முறையிலே அனைத்து தேங்காய் எண்ணெய்யையும் கேழ்வரகுக் கலவையில் சேர்த்து முடித்த பிறகு சிறுதீயில் ஒரு 5 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும்.
இச்சமயத்துல எண்ணெய் முழுவதும் ஈர்க்கப்பட்டு இந்த கேழ்வரகுக் கலவை திரண்டு ஒரு பந்து போன்ற பக்குவத்துல வரும்.
இப்பொழுது பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு மற்றும் வறுத்த நெய்யையும் கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பிறகு இந்த வடைச்சட்டியில் உள்ள கலவையை 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கையில் எண்ணெய் கேழ்வரகுக் கலவையில் இருந்து வெளியேறத் தொடங்கும் சமயத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
இப்பொழுது சுடச்சுட சுவையான பிரமாதமான பாரம்பரிய மிக்க கேழ்வரகு அல்வா ரெடி.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *