maxresdefault

ரவை போளி

தேவையான பொருட்கள்:

  • ரவை – ஒரு கப்
  • வெல்லம் – ஒரு கப்
  • தேங்காய்த் துருவல் – ஒரு கப்
  • முந்திரித் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • நெய் – கால் கப்
  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
  • மைதாமாவு – ஒரு கப்
  • கோதுமைமாவு – கால் கப்
  • உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:

  1. மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாகப் பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரித் துண்டுகளைப் போடவும்.
    உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
  3. வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  4. இந்த வெல்லக் கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.
  5. பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி, போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *