Maharashtrian-Coconut-Garlic-Chutney-4

யுகாதிச் சட்னி

தேவையான பொருட்கள்:

  • கருப்பட்டி – 50 கிராம்
  • புளி – எலுமிச்சை அளவு
  • மாங்காய் – பாதி
  • வேப்பம் பூ – 2 மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை:

  1. மாங்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. புளியை ஊற வைத்து கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டியைத் தூள் செய்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கொள்ள‌வும்.
  4. அதனுடன் கருப்பட்டி, புளிக்கரைசல், வேப்பம்பூ மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
    யுகாதிச் சட்னி தயார். ஆந்திராவின் புது வருடப் பிறப்பான யுகாதி அன்று செய்யப்படும் சிறப்புச் சட்னி இது.