Carrot_and_Beans_Thoran

மூவர்ணப் பொரியல்

தேவையான பொருட்கள்:

  • காரட் — 100 கிராம்
  • பீன்ஸ் — 100 கிராம்
  • கோஸ் — 100 கிராம்
  • பச்சை மிளகாய் — 2
  • தேங்காய்த் துருவல் — 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு, உளுந்தம்பருப்பு — அரை ஸ்பூன்
  • எண்ணெய் — 3 டீஸ்பூன்
  • இஞ்சி — கால் ஸ்பூன் (பொடியாக கட் பண்ணவும்)
  • வெங்காயம் — 1 (சிறியது கட் பண்ணவும்)
  • கறிவேப்பிலை — 2 இணுக்கு
  • உப்பு — தேவைக்கு.

செய்முறை:

  1. காரட், பீன்ஸ், கோஸ் கட் பண்ணிக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து காய்கறிகளைப் போட்டு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
  3. வெந்தவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
    சுவையான மூவர்ணப் பொரியல் ரெடி.