6099174803_46b8cdf0aa_b

மில்க் கேக்

தேவையான பொருட்கள்:

  • பால் – ஒரு லிட்டர்
  • சர்க்கரை – அரை கப்
  • நெய் – அரை கப்
  • வினிகர் – 2 டீஸ்பூன்

செய்முறை:

  1. முதலில், பாலில் பாதியளவு எடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். பால் கொதிக்கும்போது, அதில் வினிகரைச் சேருங்கள். உடனே பால் திரிந்துவிடும்.
  2. திரிந்த பாலை (சாதாரண வடிகட்டியில்) வடிகட்டுங்கள். பனீர் ரெடி! மீதியுள்ள பாலை ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  3. காயும் பாலில் பனீரைச் சேருங்கள். இது பாதியாகச் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து, விடாமல் நன்கு கிளறுங்கள்.
  4. பால் நன்கு சேர்ந்து கெட்டியாகி, நெய் பிரிந்து வரும்வரை கிளறவேண்டும். பிறகு, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, மற்றொரு தட்டால் நன்கு மூடி, சற்றுச் சாய்வாக வையுங்கள்.
  5. அதிகப்படியான நெய் வடிந்துவிடும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்வரை ஆறவிடுங்கள். பின்னர் அதை துண்டுகள் போடுங்கள். விருப்பப்பட்டால் சீவி, வறுத்த பாதாமை அதன்மீது தூவி அலங்கரிக்கலாம்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *