DSC_0563_8681

மில்க் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

  • பால் – 1 லிட்டர் + அரை கப்
  • சர்க்கரை – அரை கப்
  • வெண்ணெய் – 50 கிராம்
  • கார்ன்ஃப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  1. ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள். அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பின்னர், அரை கப் பாலில் கார்ன்ஃபிளாரைக் கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேருங்கள்.
  2. அத்துடன் வெண்ணெயையும் சேருங்கள். 2 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, வெனிலா எசன்ஸை சேருங்கள். நன்கு ஆறவிடுங்கள். ஒரு மரக்கரண்டியாலோ அல்லது முட்டை அடிக்கும் கருவியாலோ இந்தக் கலவையை நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
  3. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து, பாதியளவு செட் ஆனவுடன் வெளியில் எடுத்து திரும்பவும் ஒருமுறை அடியுங்கள். மறுபடியும் ஃப்ரீஸரில் வைத்து குளிரவிட்டு, கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *