sl1548

மாலையில் சூடான சூப்!

மாலை நேரம் ஆனாபோதும், ஒரு தெருவுக்கு 2, 3 தள்ளு வண்டிக் கடைகள் வந்து விடும். அந்த தள்ளுவண்டியில் ஆவி பறக்க சுடச் சுட சூப் ரெடியாக வந்திறங்கும். மக்கள் கூட்டம் அலை மோதும், ஆவி பறக்கும் சூப் அப்படியே அள்ளிக்குடிக்க. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூப் உறிஞ்சும் சப்தம் காதைக் கிழிக்கும். தொண்டைக்கு இதமாக சூப் பல வகைகள் இருக்கும்.
சூப் குடிப்பது நம் உடலுக்கு மிகவும் பயன் தரக்கூடியது. ஜலதோஷத்தால் பாதிக்கப்படும்போது கோழி சூப், ஆட்டுக்கால் சூப் குடிப்பது அல்லது சிறிய துண்டு கோழி இறைச்சி சாப்பிடுவது நல்லது. ஜலதோஷம் குணமாகும் .
இது அறிவியல் ரீதியான உண்மை. இவைகளில் உள்ள துத்தநாக உப்பு உடலுக்கு நன்மை செய்கிறது.
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையைக் குறைக்கவும் நாம் செய்யவேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை தான் சூப். சூப்புகளை உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை தவிர்க்க முடியும்.
சூப் நம் உடலுக்கு வலிமை சேர்க்கக்கூடியது. வெஜிடபிள், சிக்கன், மட்டன், முட்டை, பீப் என பல வகையான சூப் வகைகளை நீங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்.