mango cucumber morkuzhambu_Final3

மாம்பழ மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்:

  • மாம்பழம் – -1
  • மோர் – -500 மி.லி
  • காய்ந்த மிளகாய் – -2
  • கடுகு – -அரை டீஸ்பூன்
  • வெந்தயம் – -ஒரு டீஸ்பூன்
  • தேங்காய் – -அரை மூடி
  • எண்ணெய், உப்பு – -தேவையான அளவு

செய்முறை:

  1. மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும்.
  2. இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.