oetoo6ifheafd_bigger

மஷ்ரூம் மசாலா ஆம்லெட்

 தேவையான பொருட்கள்:

  • பொடியாக்கிய பட்டன் காளான் – 4 மேசைக்கரண்டி,
  • முட்டை- 4,
  • நறுக்கிய வெங்காயம் – 1 மேசைக்கரண்டி,
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 1,
  • மிளகுத்தூள் – 3 தேக்கரண்டி,
  • கொத்தமல்லி தழை – சிறிது,
  • உப்பு – தேவையான அளவு,
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

  செய்முறை:

  1. காளானை வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வறுத்து எடுக்கவும்.
  2. முட்டையை உடைத்து லேசாக அடித்து அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றி மேலே வறுத்த காளானைத் தூவவும். ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *