mushroom-barley-soup-recipe

மஷ்ரூம் – பார்லி சூப்

தேவையான பொருட்கள்:

  • காளான் – 100 கிராம்
  • பார்லி – 50 கிராம்
  • பட்டர் / எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 4 பல்
  • தக்காளி – ஒன்று
  • ரசப்பொடி – அரை தேக்கரண்டி
  • மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கு
  • சத்துமாவு – 2 தேக்கரண்டி
  • ஃப்ரஷ் ஒரிகனோ – சிறிது
  • கொத்துமல்லித் தழை – சிறிது

செய்முறை:

  1. வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் காளானை சிறு துண்டுகளாக நறுக்கவும். பார்லியை வேக வைத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ, தக்காளி மற்றும் காளான் சேர்த்து வதக்கி விடவும்.
  3. வெங்காயம்- – காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, ரசப்பொடி, வேகவைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவைக் கரைத்து ஊற்றி ரசப்பொடி தூவி இறக்கவும்.
  4. கொத்துமல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *