img_0172

ப்ரோக்கோலி வெஜ் மிக்ஸ் போண்டா

தேவையான பொருட்கள்:

நறுக்கிய ப்ரோக்கோலி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 100 கிராம்
கேரட் – 50 கிராம் நறுக்கியது
பீன்ஸ் – 50 கிராம் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2-3
கறிவேப்பிலை – சிறிதளவு
கடலை மாவு – 250 கிராம்
பச்சரிசி மாவு – 50 கிராம்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்த கடலை மாவு& பச்சரிசி மாவில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,ப்ரோக்கோலி, மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட்,பீன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும், கூடவே பொடித்த சோம்பு, சீரகம் பெருங்காயத்தூள்,பொடியாய் நறுக்கிய இஞ்சி ,பூண்டை சேர்த்து மிக்ஸ் செய்யவும். போதுமான உப்பைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு மாவில் காய்களை மிக்ஸ் செய்யவும்.அதனுடன் வெண்ணெயை சேர்த்து போண்டா மாவில் நன்கு மிக்ஸ் செய்யவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும்,தயார் செய்து வைத்த உருண்டைகளைச் சேர்த்து மொறு மொறுவென பொரித்து எடுக்கவும்.