ப்ரோக்கோலி ரொட்டி

ப்ரோக்கோலி ரொட்டி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 500 கிராம்
நறுக்கிய ப்ரோக்கோலி – 100 கிராம்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – மாவு பிசைவதற்கு
நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ரொட்டி சுடுவதற்கு
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

துண்டுகளாக நறுக்கிய ப்ரோக்கோலியை மிக்ஸியில் சேர்த்து பொடிதாக்கிக் கொள்ளவும். கோதுமை மாவுடன் சீரகம்,உப்பு, மிளகுத்தூள்,பொடித்த ப்ரோக்கோலி பொடியாக நறுக்கிய மல்லித்தழை போதுமான தண்ணீரைச் சேர்த்து மாவைப் பிசைந்து கொள்ளவும்.தேவையெனில் எண்ணெய் சேர்த்துப் பிசையலாம். தவாவை சூடு செய்து பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து , ரொட்டி சுடும் அளவிற்குத் தேய்த்து தவாவில் சேர்த்து போதுமான எண்ணெயைச் சேர்த்து ரொட்டியை இருபுறமும் திருப்பி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுவையான ரொட்டி ரெடி. தக்காளிச் சட்னி தேங்காய்ச் சட்னியுடன் சுவைக்கலாம்.
குறிப்பு :
பொடியாக நறுக்கிய ப்ரோக்கோலியை மாவில் சேர்த்து தேய்த்தால் மாவு தேய்க்க வராது. ஆகவே தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்துக்கொள்கிறோம்.