cashewnut-broccoli-pakode-fritters

ப்ரோக்கோலி முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 200 கிராம் நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
வரமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
முந்திரி – 50 கிராம்
நெய் – 2 டீச்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

சூடான நெய்யில் பொடித்த முந்திரியை. பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப்ரோக்கோலி,கடலை மாவு, அரிசி மாவு,வரமிளகாய்த்தூள் ,பெருங்காயத்தூள்&உப்பு சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்யவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை& மல்லித்தழையை சேர்க்கவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸை உதிரியாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் பொரித்து வைத்த முந்திரியைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவைக் கிள்ளிப் போட்டு பக்கோடாவை பொரித்து எடுத்தால் போதும், பக்கோடா தயார்.