9aa8f47f-04f8-4989-b27c-b1fee4ec9767

ப்ரோக்கோலி மிக்ஸ் வெஜ் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 200 கிராம் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது.
ப்ரெஷ் பட்டாணி – 2 மேசைக்கரண்டி (உரித்தது)
பீன்ஸ் – 50 கிராம்
உருளைக்கிழங்கு – 1
வரமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ரு டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
பெங்களூர் தக்காளி – 1
பொடித்த பட்டை – கிராம்புத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்,கூடவே பொடித்த பட்டை & கிராம்புத்தூளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாய் நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய் & வரமிளகாய்த்தூளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி ப்ரோக்கோலி, கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். கூடவே பட்டாணியை சேர்க்கவும். உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும். சுமார் 100 மி.லி. தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்தக் கலவையை அப்படியே குக்கருக்கு மாற்றவும். சுமார் 2 விசில் விட்டு காய்களை வேக வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியவுடன் வெந்த காய்கறிக் கலவையில் தண்ணீர் இருந்தால் நன்கு வறுவறுவென வறுத்தால் சுவையான ப்ரோக்கோலி தயார்.