broccoli-paruppu-usili

ப்ரோக்கோலி பொரியல்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய ப்ரோக்கோலி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2-3
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – லு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கூடவே மஞ்சள் தூளை சேர்த்து மிக்ஸ் செய்யவும். சிறு துண்டுகளாக நறுக்கிய ப்ரோக்கோலியை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பிரட்டவும். போதுமான உப்பை சேர்த்து கூடவே சிறிதளவு தேங்காய்த்துருவல், தண்ணீர் சேர்த்து ப்ரோக்கோலியை வேக வைத்து தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும். சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார்.
குறிப்பு
வெங்காயம் வதக்கியபின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.