broccoli-paruppu-usili-13-10

ப்ரோக்கோலி பாசிப்பயறு உசிலி

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு – 100 கிராம்
வரமிளகாய் – 2-3
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய ப்ரோக்கோலி – 200 கிராம்
நறுக்கிய முட்டைக்கோஸ் – 100 கிராம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – லு டீஸ்பூன்

செய்முறை:

சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய பாசிப்பயிரை தண்ணீர் வடித்து பிசு பிசுவென அரைத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு,சீரகம், வரமிளகாய்
மஞ்சள் சேர்த்து பெருங்காயத்தை சேர்த்து அரைக்கவும். அரைத்ததை இட்லித் தட்டில் வைத்து,ஆவி கட்டி வேக வைக்கவும். வெந்த பின்னர்
பாசிப்பயறை உதிர்த்துக் கொள்ளவும்.தனியே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் நறுக்கிய ப்ரோக்கோலி, முட்டைக் கோஸ் சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும். வெந்தவுடன் உதிர்த்து வைத்த பாசிப்பயிரை இதனுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பிரட்டி இறக்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து பரிமாறலாம்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *