img_2218

ப்ரோக்கோலி தக்காளி மிக்ஸ் சப்ஜி

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி – 250 கிராம்
சுரைக்காய் – 100 கிராம் நறுக்கியது
ப்ரோக்கோலி – 100 நறுக்கியது
சீரகம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
நறுக்கிய – கறிவேப்பிலை சிறிதளவு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
வரக்கொத்து மல்லி – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
பூண்டு – 5 பல்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம்,பொடித்த கொத்து மல்லியைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கியவுடன் பொடியாய் நறுக்கிய சுரக்காய் & ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும். அதன் பின் நறுக்கிய பெங்களூர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்க விட்டு இறக்கவும். பிளெண்டரிலோ அல்லது மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.சுவையான சப்ஜி தயார். நறுக்கிய கறிவேப்பிலையை மேலே தூவலாம்.