broccolisoup

ப்ரோக்கோலி சூப்

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி துண்டுகள் – 100 கிராம்
கேரட் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – லு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
மல்லித்தழை – சிறிதளவு
நறுக்கிய புதினா – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயைச் சேர்த்து நறுக்கிய ப்ரோக்கோலி கேரட்,பீன்ஸ்,பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.கூடவே அதனுடன் சீரகம் – பூண்டு சேர்த்து வதக்கவும், போதுமான மிளகுத்தூள் தண்ணீர்& உப்பு சேர்த்து,சிம்மில் ப்ரோக்கோலி யை வேக விடவும். நறுக்கிய புதினாவைச் சேர்த்து வேக விடவும். தண்ணீர் பாதி அளவு சுண்டும் வரை ப்ரோக்கோலியை வேக விடவும். வெந்த கலவையை தனியே எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் அரைத்து சூப் தண்ணீர் சேர்க்கவும். சிம்மில் சூடு செய்யவும். நறுக்கிய மல்லித்தழையைச் சேர்த்துக்கொண்டால் சூப் அருமையாக இருக்கும்.