029

ப்ரோக்கோலி சில்லி

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 200 கிராம்
மைதாமாவு – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 50 கிராம்
கார்ன் ஃப்ளோர் மாவு – 50 கிராம்
வர மிளகாய்த் தூள் – லு டீஸ்பூன்
கரம் மசாலா – லு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

கழுவி துண்டுகளாக நறுக்கிய ப்ரோக்கோலியை சுடு தண்ணியில் போட்டு தண்ணீர் வடித்து தனியே வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு , அரிசி மாவு கார்ன் ஃப்ளோர் மாவைச் சேர்க்கவும். அதனுடன் மிளகுத்தூள், வரமிளகாய்த் தூள் கரம் மசாலா ,உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.போதுமான தண்ணீரை சேர்த்து மாவை கரைத்துக்கொள்ளவும். பஜ்ஜி மாவு அளவுக்கு திக்காக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வேக வைத்த ப்ரோக்கோலியை மாவில் பிரட்டி சூடான எண்ணெய்யில் மொறு மொறுவென பொரித்து எடுத்தால் ப்ரோக்கோலி சில்லி தயார்.
குறிப்பு

அரிசி மாவு சேர்ப்பதால் மொறு மொறுப்பு அதிகம் இருக்கும்.