broccoli-soup

ப்ரோக்கோலி க்ரீம் சூப்

தேவையான பொருட்கள்:

  • ப்ரோக்கோலி — 1 பெரிய பூ
  • கேரட் — 1
  • உருளைக் கிழங்கு — 1
  • சிக்கன் க்யூப் — 1 சிறியது
  • உப்பு — சுவைக்கேற்ப
  • பால் — 1 கப்
  • நீர் — 1 கப்
  • க்ரீம் மில்க் 35% — 2 தேக்கரண்டி

செய்முறை:

  1. கொடுக்கப்பட்டுள்ள எல்லா காய்கறிகளையும் சிறிதாக வெட்டவும்.
    ஒரு பாத்திரத்தில் பால் , நீர், சிக்கன் க்யூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளையும் போட்டு வேக விடவும்.
  2. காய்கறி நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் (தீறீமீஸீபீமீக்ஷீ) போட்டு மை போல அரைக்கவும்.
    அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி க்ரீம் மில்க் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
    உப்பு தேவையென்றால் போடவும்.
  3. சூப் தண்ணீர் போல் தேவை என்றால் சிறிது நீர் சேர்க்கலாம். சூப் திக்காக தேவை என்றால் 3 தேக்கரண்டி எண்ணெய், 3 தேக்கரண்டி மைதா கலந்து சூப் இறக்கு முன் விடலாம். இந்த கலவை விடும் போது
  4. கவனம் தேவை. ஒரு கையால் கிளறிக்கொண்டே விடவும்.
    இல்லாவிட்டால் சூப் கட்டி பட்டுவிடும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *