egg-free-colesaw

ப்ரோக்கோலி கோல்ஸ்லா

தேவையான பொருட்கள்:

சன்னமாக நறுக்கிய முட்டைக்கோஸ் – 50 கிராம்
சன்னமாக நறுக்கிய கேரட் – 50 கிராம்
சன்னமாக நறுக்கிய ப்ரோக்கோலி – 100 கிராம்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வினிகர் – 1 மேசைக்கரண்டி
செலரி – சிறிதளவு

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் சன்னமாக நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், ப்ரோக்கோலி சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் மிளகுத்தூள்,உப்பு, வினிகர், நறுக்கிய செலரியைச் சேர்த்து நன்கு டாஸ் செய்யவும். சுவையான கோல்ஸ்லா தயார்.
குறிப்பு
நம் சுவைக்கு ஏற்ப தேவையெனில் நறுக்கிய காய்களை அரைபதம் பாலில் வேக வைத்து கோல்ஸ்லா செய்யலாம்.