20150729_154910

ப்ரோக்கோலி கட்லட்

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 100 கிராம் நறுக்கியது
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
கேரட் – 50 கிராம் நறுக்கியது
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
அரிசி மாவு – 2 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – சிறிதளவு
பிரட் தூள் – 200 கிராம்

செய்முறை:

வேக வைத்த ப்ரோக்கோலி ,கேரட்டுடன் உப்பு சேர்த்து சுமார் அரைபதம் வேக வைத்து உருளையின் தோல் உரித்து ஒன்றாக சேர்த்து மசித்துக்கொள்ளவும். போதுமான மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்
பூண்டை சேர்த்து நன்கு காயுடன் மிக்ஸ் செய்யவும் .கூடவே மல்லித்தழையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். சிறு சிறு உருண்டைகள் செய்து கட்லட் வடிவத்தில் உருண்டையாகவோ, நீளமாகவோ தட்டிக்கொள்ளவும்.அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.தயார் செய்த உருண்டை மீது தடவவும். அதன் பின் பிரட் தூளில் பிரட்டவும். சூடான தோசைக்கல்லின் மேல் வைத்து போதுமான எண்ணெய் சேர்த்து இருபுறமும் திருப்பி பொன்னிறமாக சுட்டு எடுத்தால் டொமேட்டோ சாசுடன் தயார்.