babycorn fingers

பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள்:

  • பேபி கார்ன் – 12-15
  • மைதா – 2 மேஜைக்கரண்டி
  • அரிசி மாவு – 1½ மேஜைக்கரண்டி
  • கரம் மசாலாத் தூள் – ¼  தேக்கரண்டி
  • இஞ்சி – பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
  • சோள மாவு – 2 மேஜைக்கரண்டி
  • சாட் மசாலாத் தூள் – ¼  தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் – ¼  தேக்கரண்டி
  • சோடா உப்பு – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

  1. தேவைப்பட்டால் ஒரு குக்கரில் பேபி கார்னைப் போட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். பேபி கார்ன் பெரியதாக இருந்தால் அதனை நீள் வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
  2. பின்பு பேபி கார்ன் மற்றும் எண்ணெயைத் தவிர அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
  3. சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
    அனைத்து பேபி கார்ன்களையும் அதில் முக்கி எடுக்கவும்.
  4. பின்பு அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
    பின்பு அவற்றை எடுத்து பரிமாறவும்.