OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

பெப்பர் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

 • சிக்கன் – -அரைகிலோ
 • சின்ன வெங்காயம் – -100 கிராம்
 • தக்காளி – -2
 • மிளகுத்தூள் – -4 டீஸ்பூன்
 • சீரகத்தூள் – -2 டீஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது – -2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – -அரை டீஸ்பூன்
 • தயிர் – -3 டீஸ்பூன்
 • தேங்காய்ப்பால் – -ஒரு கப்
 • உப்பு – -தேவையான அளவு
 • கறிவேப்பிலை – -மல்லித்தழை – சிறிதளவு
 • எண்ணெய் – -3 டீஸ்பூன்

செய்முறை:

 1. சிக்கனை நறுக்கி கழுவி வைக்கவும். அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
 2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 3. தக்காளியையும் சேர்த்து வதக்கி இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்துக் கிளறவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
 4. 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
 5. அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பெப்பர் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.