bangalore-chicken-curry-2

பெங்களூர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ
முட்டை – 3
மைதா – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது – அரை தேக்கரண்டி
பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
எலுமிச்சை – அரை மூடி
பட்டை – சிறிது
கிராம்பு – 5 கிராம்
எண்ணெய் – பொரிக்க – தேவையான அளவு
சிவப்பு கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
உப்பு — தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தம் செய்து அதில் மைதா சேர்த்து பிரட்டி வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.சிக்கனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டவும்.
அதன் பிறகு பட்டை மற்றும் கிராம்பை பொடி செய்து சிக்கனுடன் சேர்த்து கலர் பவுடர், உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்றாகப் பிசையவும். சிறிது கூட தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்த இக்கலவையை சுமார் 15 – 25 நிமிடங்கள் வரை ஊற விடவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான பெங்களூர் சிக்கன் ரெடி.