maxresdefault

பூண்டு சூப்

தேவையான பொருட்கள்:

  • வெள்ளைப்பூண்டு — 20 பல்
  • மஞ்சள் பொடி — 1 சிட்டிகை
  • பெருங்காயப் பொடி — 1 சிட்டிகை
  • நெய் — 2 தேக்கரண்டி
  • உப்பு — ருசிக்கேற்ப
  • மிளகுப்பொடி — அரை தேக்கரண்டி
  • ரசப்பொடி — அரை தேக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
    பூண்டுப் பற்களை மைக்ரோ ஓவனில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும். சுலபமாக உரிக்க வரும்.
    உரித்த பூண்டுப் பற்களை, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். அதில் ரசப் பொடியைப் போட்டு மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
  3. வெந்த பூண்டுப் பற்களை, ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
    அடுப்பில் கொதித்திருக்கும் கலவையில், மசித்து வைத்திருக்கும் பூண்டுகளை சேர்க்கவும். அதனுடன் நெய்யையும் சேர்க்கவும்.
  4. சுவையான பூண்டு சூப் ரெடி. உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அருந்தவும்.