6-img_0123

பூண்டுத் தொக்கு

தேவையான பொருட்கள்:

பூண்டு – அரை கிலோ,
எலுமிச்சம் பழச்சாறு – 1 கப்
மிளகாய்த்தூள் – அரை கப்
உப்பு – கால் கப்
வறுத்துப் பொடித்த வெந்தயம் – -பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்

செய்முறை:

பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு சேருங்கள். கடுகு பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள்.
பின்னர் அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயம்-பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சாறு வற்றி, எண்ணெய் மேலே மிதக்கும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின், பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *