pumpkin_thayir_pachadi

பூசணிக்காய் தயிர்ப் பச்சடி

தேவையான பொருட்கள்:

  • துருவிய வெள்ளைப் பூசணி — 1 கப்
  • புளிக்காத, ஏடு எடுத்த கெட்டித் தயிர் — 2 கப்
  • தேங்காய்த் துருவல் — 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் — 1
  • கடுகு, எண்ணெய் — 1/2 டீஸ்பூன்
  • உப்பு — தேவையான அளவு
  • பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை — சிறிது

செய்முறை:

  1. தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை மையாக அரைக்கவும்.
  2. தயிரில் அரைத்த விழுது, துருவிய வெள்ளைப் பூசணி, உப்பு சேர்த்து கடுகு போட்டு தாளிக்கவும்.
    கொத்துமல்லித்தழையைச் சேர்க்கவும்.