mathansambar1

பூசணிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

  • நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய் (சிறிய பூசணிக்காயில் – கால் பங்கு)
  • வெங்காயம் — ஒன்று
  • தக்காளி — ஒன்று
  • சாம்பார் பொடி — 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் — கால் தேக்கரண்டி
  • புளி — ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
  • துவரம் பருப்பு — அரை கப்
  • கொத்துமல்லித் தழை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் — ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை — தாளிக்க

செய்முறை:

  1. பருப்பைக் களைந்து வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  2. பருப்புடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். (ஒரு விசில் வரும் வரை விட்டு சிறுதீயில் 10 நிமிடம் வைக்கவும்).
    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  3. இதில் வேக வைத்த பருப்புக் கலவை ஊற்றி அதில் நறுக்கிய பூசணிக்காய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் நீர் விட்டு மூடி வேகவிடவும்.
    காய் வெந்ததும் புளிக் கரைசல் சேர்த்து கொதித்தும், கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.
  4. சுவையான வெள்ளைப் பூசணிக்காய் சாம்பார் தயார். சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.