pooriyal

பூசணிக்காய்ப் பொரியல்

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் பூசணிக்காய் — 1/2 கிலோ
  • நாட்டுத் தக்காளி — 2
  • பச்சைமிளகாய் — 4
  • மிளகாய்த்தூள் — 1/2ஸ்பூன்
  • எண்ணெய் — 1 ஸ்பூன்
  • கடுகு — 1/4 ஸ்பூன்
  • உப்பு — 1/2 ஸ்பூன்

செய்முறை:

  1. பூசணிக்காய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
    மிளகாயை கீறி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
    கடுகு வெடித்ததும் மிளகாயை சேர்க்கவும்
  3. மிளகாய் சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    பின் பூசணிக்காயை சேர்த்துக் கிண்டவும்
  4. மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.
    காய் வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடாக பரிமாறவும்.
  5. சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.